100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு கோலங்கள் வரைந்து திருநங்கைகள் உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்குப்பதிவை எட்டுவதற்கு அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையம் இணைந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கல்லூரிகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் ஒன்றிணைந்து தேர்தல் விழிப்புணர்வு கோலங்களை வரைந்தனர். இதனை கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

Loading