கொங்கு நாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி விழிப்புணர்வு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரான கிராந்திகுமார் பாடி தலைமையில்நடைபெற்றது. கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேர்தலில் 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று விழிப்புணர்வு மனித சங்கிலி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து, விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, தேர்தல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியை மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் வட்டாட்சியர் மணிவேல் மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் 18வயது பூர்த்தியடைந்த அனைவரும் 100 சதவிகித வாக்குப்பதிவை செலுத்திட வலியுறுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நமது மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற இலக்கினை அடைய மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு விளம்பர பதாகைகள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், கையெழுத்து இயக்கங்கள். குறும்படங்கள், விழிப்புணர்வு பேரணிகள், ரங்கோலி கோலங்கள், ராட்சச பலூன், டிசர்ட் தொப்பி, சுவர் ஓவியங்கள் உள்ளிட்டவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும், பொள்ளாச்சி பேருந்து நிலையத்தில் (ஊரகப் பகுதி) தப்பாட்டம் அடித்து பேருந்து பயனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுவர்களில் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு வாக்காளர்களுக்கு 100% வாக்களிப்பதன்அவசியம் வலியுறுத்தப்பட்டது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.சூலூர் வட்டம் மலைப்பாளையம் கிராமத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கடை வீதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மயிலம்பட்டி கிராமம், கோமுகி துணி தொழிலகத்தில் 50க்கும் மேற்பட்ட மகளிர் தொழிலாளர்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ‘மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு வாக்காளர்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, ஜமீன்முத்தூர், ராமபட்டிணம் ஆகிய பகுதிகளில் கோயம்புத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலமாக தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள் ஒளிபரப்பட்டது.
மேலும், வடசித்தூர், காட்டம்பட்டி ஆகிய கிராமங்களில் தப்பாட்டம் அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வதம்பச்சேரி கிராமத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பேருந்து நிறுத்தம் மற்றும் கடை வீதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வருகின்ற ஏப்ரல் 19. 2024 நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவு வலியுறுத்தி மாபெரும் இருசக்கர வாகனம் பேரணி நடைபெற்றது. இத்தேர்தல் விழிப்புணர்வு பேரணியில் ஆனைமலை வருவாய்துறை மற்றும் காவல்துறை சேர்ந்த சுமார் 100 அலுவலர்கள் கலந்துகொண்டனர். வாக்காளர்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக, பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில்பாளையம். காப்பளாங்கரை மற்றும் கக்கடவு ஆகிய கிராமங்களில் சென்று, தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கி வருகின்ற 19ம் தேதி மக்களவைப் பொதுத்தேர்தல் நாளான்று அனைத்து வாக்காளர்களும் வாக்காளிக்கவேண்டும் என்று வாக்காளர்களின் வீடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
Leave a Reply