கோவை, ஜோஸ் அலுக்காஸ் நகைக்கடையில் 200 சவரன் நகை கொள்ளை. 5 தனி படைகள் அமைத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை. 

கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் பிரபல தங்கநகை விற்பனை நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நகை கடையில் தினமும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்து நகைகளை வாங்கி சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கடையின் அதிகாரிகள் ஊழியர்கள் கடையை மூடி சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை கடையை திறந்த போது நகைக்கடையில் இருந்த தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனைக்கண்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த கொள்ளையில் சுமார் 200 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. 

இது தொடர்பாக கடை முழுவதும் நடத்திய சோதனையில்  ஏசி வெண்டிலேட்டர் மூலம் கடைக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. தடயவியல் சோதனை இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் மாநகர காவல்துறை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மோப்ப நாய் உதவியுடனும் தடயவியல் சோதனை நிபுணர்களுடனும் தொடர்ந்து நகைக்கடையில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. 

Loading