10ம் வகுப்பு பொதுத்தேர்வு கோவை மாவட்டத்தில்158 தேர்வு மையங்களில் 40329 மாணவ மாணவியர்கள் தேர்வெழுதுகின்றனர்.

தமிழகத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மையத்தில் ஒன்றான டவுன்ஹால், பிரசண்டேஷன் கான்வென்ட் மேல்நிலைப்பள்ளியில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு. பாலமுரளி உடனிருந்தார்.பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, கோயம்புத்தூர் மாவட்டத்தில் 2023-2024 ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வில் 526 பள்ளிகளை சேர்ந்த 40,329 மாணவ மாணவியர்கள் பள்ளிகளின் மூலமாகவும், 1587 மாணவ மாணவியர்கள் தனித்தேர்வர்களாகவும் எழுதுகின்றனர். 

இவர்களில் 742 மாணவ மாணவியர்கள் மாற்றுத்திறனாளிகளாவார்கள். நமது மாவட்டத்தில் நடைபெறும் இத்தேர்வில் மொத்தம் 158 தேர்வு மையங்களுக்கு 11 வினாத்தாள் கட்டுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 46 வழித்தட அலுவலர்கள் ஆயுதம் தாங்கிய காவலர் துணையுடன் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து மந்தணக் கட்டுகளை தேர்வு மையங்களுக்கு வழங்கும் பொருட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.இத்தேர்வினை கண்காணிக்க வினாத்தாள் கட்டுகாப்பாளர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் பறக்கும் படை உறுப்பினர்கள் வழித்தட அலுவலர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மொத்தம் 2860 அலுவலர்களும் தேர்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இத்தேர்வு சிறப்பாக நடைபெறுவதற்கு நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பத்தாம்வகுப்பு பொதுத் தேர்வினை எழுதும் அனைத்து மாணவ மாணவிகள் மனஅழுத்தமின்றி, பதட்டமின்றி நிதானமாக நன்கு பயின்று, சிறந்தமுறையில்தேர்வெழுதி அதிகளவில் தேர்ச்சி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.

Loading