பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் கோவையில் 57-வது அகில இந்திய அளவிலான ஆண்கள் கூடைப்பந்து போட்டிகள் இன்று துவங்கி ஆகஸ்ட் 30-ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு பி.எஸ்.ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுகின்றது.
இதில் அகில இந்திய அளவில் மிகச்சிறந்த 8 ஆண்கள் அணி தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டு பகுதியாக பிரிக்கப்பட்டு முதல் மூன்று நாட்கள் சூழல் முறையிலும். பின்பு முதல் இரண்டு இடங்கள் பெறும் அணிகள் அறையிறுதிக்கு தகுதி பெறும் அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதி போட்டியில் விளையாடுவார்கள்.
ஏ பிரிவில் – இந்திய கப்பல் படை அணி – லோனாவாலா, வருமாண வரி துறை அணி – சென்னை, பேங்க் ஆஃப் பரோடா அணி – பெங்களூரு மற்றும் கேரளா போலீஸ் அணி – கேரளா ஆகிய அணிகளும்.
பி பிரிவில் – இந்தியன் வங்கி அணி – சென்னை, இந்திய இராணுவ அணி – புது தில்லி மற்றும் கேரளா மாநில மின்சார வாரிய அணி – கேரளா அணிகளும் கலந்து கொள்கின்றன.
போட்டியில் வெற்றி பெறுகின்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் பிஎஸ்ஜி சுழல் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பை, அரையிறுதிப் போட்டியில் மூன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் நான்காம் இடம் பெறும் அணிக்கு 15 ஆயிரம் மற்றும் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படும்.
முன்னதாக நடைபெற்ற துவக்க விழாவில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கிவைத்தார். பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் டாக்டர்.கே.பிரகாசம், பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் டாக்டர். ருத்ரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். முதல் போட்டியில் இந்தியன் வங்கி அணியை எதிர்த்து சுங்க அணி விளையாடியது. இதில் இந்தியன் வங்கி அணி 79 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. எதிர்த்து விளையாடிய சுங்கம் அணி 77 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது. இரண்டாவது போட்டியில் இந்திய கப்பல் படை அணியை எதிர்த்து கேரளா போலீஸ் அணி விளையாடியது. இதில் இந்தியன் கப்பல் படை அணி 93 புள்ளிகள் எடுத்து வெற்றிபெற்றது. எதிர்த்து விளையாடிய கேரளா காவல்துறை அணி 77 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது.
Leave a Reply