57வது பி.எஸ்.ஜி. கோப்பை ஆண்கள் கூடைப்பந்து போட்டியில் வருமான வரி, இந்திய ராணுவ அணிகள் மோதுகின்றன.

பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்கள் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 26-ம் தேதி துவங்கி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளன.

இதில் அகில இந்திய அளவில் மிகச்சிறந்த 8 அணிகளான இந்திய கப்பல் படை அணி, பேங்க் ஆஃப் பரோடா அணி, இந்திய இராணுவ அணி, இந்தியன் வங்கி அணி, வருமான வரி துறை அணி, சுங்க வரி அணி, கேரளா மாநில மின்சார வாரிய அணி மற்றும் கேரளா போலீஸ் ஆகிய அணிகள் கலந்து கொண்டன.

முதல் மூன்று நாட்கள் சூழல் முறையில் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வருமான வரி அணி, இந்தியன் வங்கி அணி, இந்திய ராணுவ அணி மற்றும் இந்திய கப்பல் படை அணிகள் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. முதல் அரையிறுதி  போட்டியில் வருமான வரி அணியை எதிர்த்து இந்தியன் வங்கி அணி விளையாடியது. இதில் வருமான வரி அணி 106 – 84 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய இராணுவ அணியை எதிர்த்து இந்திய கப்பல் படை அணி விளையாடியது. இதில் இந்திய இராணுவ அணி 88 – 70 என்ற புள்ளிகணக்கில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. நாளை நடைபெறும் இறுதி போட்டியில் சென்னை வருமான வரி அணியை எதிர்த்து டெல்லி இந்திய ராணுவ அணி விளையாடுகின்றது.

Loading