கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூர் உரக்கிடங்கு பகுதியில் 99வது வார்டில் உங்கள் தொகுதியில் முதல்வர் 2023-24 திட்டத்தில், மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் ABC மையம் கட்டுவதற்கான கட்டுமானப் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு ஆகியோர் தொடங்கி வைத்தனர். மேலும் கட்டுமானப் பணியினை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
முன்னதாக தெற்கு மண்டலம் 97 வது வார்டுக்குட்பட்ட ஈச்சனாரி ஐயப்பா நகளில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொது கழிப்பிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.
Leave a Reply