மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இன பெண்கள் இருவரை ஒரு சிலர் நிர்வாணப்படுத்தி அவர்களை கொடூரமான முறையில் தாக்கியதுடன் அவர்களை கூட்டாக சேர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தி உள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இச்சம்பவத்தை கண்டித்து பல்வேறு பெண்கள் அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை ஒய் டபிள்யூ சி ஏ பெண்கள் அமைப்பினர் இந்த மணிப்பூர் சம்பவத்தை கண்டிக்கும் விதமாகவும் நாடு முழுவதும் பெண்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டியும், மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டியும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் மணிப்பூர் சம்பவத்திற்கு அவர்களது கண்டனத்தையும் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் கூறும் போது பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று அனைவராலும் போற்றப்பட்டு வரும் நிலையில் இது போன்ற கீழ்த்தரமான செயல்களால் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் எனவே நாடு முழுவதிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசுகளும், காவல்துறையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர். மேலும் தங்களால் முடிந்த அளவு எதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.
Leave a Reply