உடலை சூடேற்றி, முயற்சியும் முறையான பயிற்சியும் இருந்தால் மட்டுமே பளுதூக்கமுடியும் என்பதை நிருபித்து வெற்றியும் கண்டுள்ளார் கோவை உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த பளுதூக்குதல் பயிற்சியாளர் முனியப்பன். போட்டிக்கு வீரர், வீராங்கனைகளை உருவாக்குவது இவரது பணி. இளைஞர்களுக்கு இணையாக போட்டிபோடும் முனியப்பனின் உடலிற்கு வயதோ 85 மனதிற்கு வயதோ 25. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இளைஞர் முனியப்பன் பளுதூக்கும் போட்டியில் கலந்துகொள்ள வேண்டும்மென்ற ஆசையில் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்ததுடன் பளுதூக்கும் போது, உடல் மெலிந்து காணபட்ட முனியப்பனை பார்த்து அங்கிருந்த பெரியவர்களோ வெயிட்டை காலில் போட்டுக்காத என விரட்டியுள்ளனர். அவர்களுக்கு தெரியாது இவர்தான் அகில இந்திய அளவில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க போகிறார் என்று. உடற்பயிற்சி கூடத்தில் இருந்து விரட்டபட்டேன் அப்போது தான் வென்று காட்ட வேண்டுமென்று உத்வேகம் பிறந்ததாக கூறுகிறார் முனியப்பன்.

ஆரஞ்சு ஆப்பிள் கூட வாங்க முடியாத சூழலில் ஜிம்னாஸ்டிக் செய்து கொண்டிருந்த தனக்கு வெயிட் லிப்டிங் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் மிக மிக கஷ்டபட்டு 1975ல் முதன் முதலில் அகில இந்திய போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததாக தனது வெற்றி கதையை நம்மிடம் பகிர்ந்தார் முனியப்பன். வறுமை ஒரு புறம், வயதோ மறுபுறம் இருக்க திருமணம் ஆனதும் வெயிட் லிப்டிங்கிற்கான உபகரணங்கள் வாங்க தனது மனைவியின் தாலியை அடகுவைத்து வாங்கியதாக புன்சிரிப்புடன் கூறினார். மேலும் பன்முக திறமையுடன் பல போட்டிகளில் வெற்றி பெற்று தற்போது 85 வயதிலும் பளுதூக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சியளித்து வருகிறேன் என்கிறார் நம்பிக்கையுடன்.

பயிற்சி கொடுத்தால் மட்டுமே அவர் பயிற்சியாளர் இல்லை பயிற்சி கொடுத்து வீரர்களை வெற்றி பெற வைத்தால் மட்டுமே ஒரு பயிற்சியாளரின் வெற்றி உள்ளது என்றவர் பல வீரர்களை வெற்றி பெற வைத்து தானும் பயிற்சியாளராக வெற்றி பெற்றுள்ளதாக கூறுகிறார் முனியப்பன். தனக்கு கணக்கு வரவில்லை என்றாலும் வீரர்களை வெற்றி பெற வைக்க தன் மனது கணிப்பொறி போல் கணக்கு போடும் என்றவர், தன் ஆசானிடம் இதை கற்றுகொள்ளவே தனக்கு 10 வருடமானதாக கூறினார். வீரர் வீராங்கனைகளை வெற்றி பெற வைக்க ஓடிக்கொண்டிருக்கிறேன் எனக்கு வயதே கிடையாது என்றவர் தற்காப்பு போட்டிகளில் ( மார்ட்சியல் ஆர்ட்ஸ்) தேசிய அளவில கலந்துகொள்ள தயாராகி கொண்டிருப்பதாக தெரிவித்தார் தன்னம்பிக்கையுடன்.
Leave a Reply