கால்பந்து விளையாடி அகாடமியை துவக்கி வைத்த கோவை கலெக்டர்.

கோவை செட்டிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் மேம்படுத்தி தர வேண்டி கோவை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுருந்தது.
இதையடுத்து கோவை மாவட்ட நிர்வாகம் தனியார் நிறுவனமான வாக்-கரோ நிருவனத்தின் சமுக நிதி பங்களிப்புடன் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் ஏற்கனவே இருந்த விளையாட்டு மைதானம் மேம்படுத்தப்பட்டு புதிதாக “கால்பந்து அகாடமி” அமைக்கபட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்ற விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, , வாக்கரோ நிருவனத்தின் நிர்வாக இயக்குனர் நவ்சாத், செட்டிபாளையம் பேரூராட்சி தலைவர் இரங்கசாமி உள்ளிடோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். முன்னதாக மாணவர்களுக்கு கால்பந்தினை வழங்கிய மாவட்ட ஆட்சியர் கால்பந்தை உதைத்தும் மைதானத்தை திறந்து வைத்தார்.

Loading