கோவை பொள்ளாச்சி சாலை ஈச்சனாரி பகுதியிலுள்ள ரத்தினம் இண்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில் 12வது ஆண்டு விளையாட்டு போட்டிகள் “ஸ்போர்ட்ஸ் வேகன்ஸா” என்ற பெயரில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆசியா வாலிபால் சாம்பியன் குரு பிரசாந்த் மற்றும் கவுரவ விருந்தினராக தென் ஆசிய தடகள வீரர் ரத்தினவேல் கலந்து கொண்டனர்.
ரத்தினம் குழுமங்களின் தலைவர் மதன் ஏ.செந்தில், இயக்குனர் ஷீமா செந்தில் ஆகியோர் தலைமை வகித்தனர். இப்போட்டிகள் ரத்தினம் இண்டர்நேசனல் பப்ளிக் பள்ளியில் பயிலும் சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட ஓட்டப்பந்தயம், தடகளப்போட்டி என பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் ஆஸ்மி தலைமை அதிகாரி அபிநயா சங்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆசிய வாலிபால் சாம்பியன் குருபிரசாத் இந்தியாவிற்காக விளையாட்டு போட்டிகளில் பங்குகொள்வது என்பது பெருமையாக உள்ளது. மேலும் ஆசியா வாலிபால் போட்டிக்கு என நல்ல பயிற்சி எடுத்துவருவதாகவும், தமிழகத்தில் வாலிபால் என்பது நல்ல முறையில் கொண்டு செல்லபடுகிறது என்றவர் மற்ற விளையாட்டுகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை போல் வாலிபால் விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டுமென கேட்டுகொண்டார். இதனை தொடர்ந்து பள்ளி மாணவர்களுடன் இனைந்து வாலிபால் விளையாடிய குருபிரசாத். வாலிபால் விளையாட்டு நுணுக்கங்களை மாணவர்களுக்கு கூறினார்.
Leave a Reply