ஈஷாவால் பயிற்சி அளிக்கப்பட்ட 3 கிராமப்புற மாணவர்கள் கோவையில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். கோவை மேற்கு குறு மைய பள்ளிகளுக்கான செஸ் போட்டி கல்வீரம்பாளையம் அரசு பள்ளியில் கடந்த 28-ம் தேதி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்தப் போட்டியில் ஈஷாவால் பயிற்சி அளிக்கப்பட்ட மாணவர்களும் பங்கேற்றனர்.
போட்டியின் முடிவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் முட்டத்துவயல் பழங்குடியினர் பள்ளியைச் சேர்ந்த புவனா முதலிடம் பிடித்தார். மேலும், அதேப் பள்ளியில் படிக்கும் மாணவர் அஜய் ஆதர்ஷ் 14 வயதிற்குட்பட்டோருக்கான் பிரிவில் 2-ம் இடமும், ஈஷா வித்யா பள்ளியில் படிக்கும் அனுஸ்ரீ 3-ம் இடமும் பிடித்தனர்.
இதன்மூலம், இந்த 3 மாணவர்களும் செப்டம்பர் 11-ம் தேதி நடைபெறும் மண்டல அளவிலான செஸ் போட்டியில் விளையாட தகுதிப் பெற்றுள்ளனர். அந்த மாணவர்களின் பெற்றோர்கள் இந்த வெற்றிக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஈஷாவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
ஈஷா யோகா மையத்திற்கு அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக ஈஷா பல்வேறு வழிகளில் உதவி வருகிறது. அதில் ஒரு பகுதியாக, ஆர்வமுள்ள 20 மாணவர்களுக்கு கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக செஸ் பயிற்சியும் வழங்கி வருகிறது. இந்த பயிற்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply