கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, மாணவர்களை வருங்கால பொறியாளர்களாக உருவாக்குவதில் சிறந்த பங்காற்றி வருகிறது. இன்னிலையில் குமரகுரு கல்வி நிறுவனம் மற்றொரு மைல்கல்லைக் குறிக்கும் வகையில், நான்கு தசாப்தங்களாக உயர்ந்து நிற்கிறது. இதனிடையே குமரகுரு கல்லூரியில் 2023ல் முதலாம் ஆண்டு கல்லூரி மாணவர்களை வரவேற்கும் “ஸ்வாகதம்” நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெற்றோர்களுடன் வரும் முதலாம் ஆண்டு மாணவர்களை கல்லூரி நிர்வாகம் மற்றும் கல்விப் பணியாளர்களால் வரவேற்கப்பட்டனர்.குமரகுரு நிறுவனங்களின் பாரம்பரியத்தின் மீது நம்பிக்கையை வலுப்படுத்தியதற்காக பெற்றோருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக ஸ்வாகதம் 2023 அமைந்துள்ளது. குமரகுரு நிறுவனங்களின் தாளாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குமரகுரு நிறுவனங்களின் இணை தாளாளர் சங்கர் வாணவராயர் வாழ்த்துரை வழங்கினார். கல்வி, இணை பாடத்திட்டம் மற்றும் கூடுதல் பாடத்திட்டத்தை தொடர்ந்து புதுப்பிப்பதன் மூலம், நிறுவனம், அதன் தொலைநோக்கு மற்றும் மாணவர்களை எவ்வாறு படிப்படியாக வளர்த்து வருகிறது என்பதைப் பற்றி பெற்றோருக்கு தெரியப்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கற்றல் செயல்பாட்டில், கல்லூரிக்கு இணையாக சமமான பொறுப்பைப் வகிக்கிறார்கள் என்பதை குறித்தும் விளக்கப்பட்டது.
மாணவர்களுக்கு, ஸ்வாகதம் மூலமாக கல்லூரியின் உள்கட்டமைப்புகள் மற்றும் அவர்களின் உள்ளார்ந்த ஆர்வங்கள் மற்றும் திறமைகளை எப்படி அடையாளம் என்பதை பற்றி தெரிந்து கொண்டனர்.ஸ்வாகதம் மூலம், மாணவர்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காகவும், குமரகுரு கற்றல் மண்டலத்திற்கு அவர்களை வழிநடத்தும் மூத்தவர்களுக்காகவும் ஒரு வார காலச் செயல்பாடான இக்னைட் 2023 பற்றி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.
Leave a Reply