39வது மாநில அளவிலான ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் 2023 சாம்பியன் போட்டிகள் துவக்கம்..

39 வது ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் மாநில அளவிலான 2023 சம்பியன் சிப் போட்டிகள் கோவை பிரேம் பிரகாஷ் ஸ்னூக்கர் & பில்லியர்ஸ் அகடாமியில் இன்று துவங்கியது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600 பேர் பங்கேற்க உள்ளனர். முன்னதாக நடைபெறற தகுதி சுற்றில் வெற்றி பெற்ற  நாற்பது வீரர்கள் இன்று துவங்கிய போட்டிகளில் பங்கேற்கின்றனர். ஸ்னூக்கர் போட்டிகள் இன்று துவங்கி 10ம் தேதி இறுதி போட்டி நடைபெறுகிறது. பில்லியர்ட்ஸ் போட்டிகள் 11ம் தேதி துவங்கி 14ம் இறுதி போட்டி நடைபெறுகிறது. 

இதன் பரிசளிப்பு விழா செப்டம்பர் 17ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பங்கஜ் ஸ்னூக்கர் போட்டிகளில் உலக அளவில் அதிக சாதனைகளை படைத்த இந்திய வீரர் அத்வானி மற்றும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பரிசுகளை வழங்க இருப்பதாக சங்கத்தலைவர் தெரிவித்தார். போட்டிகளின் துவக்க நாளான இன்று நடைபெற்ற போட்டிகளை மாநில ஸ்னூக்கர் விளையாட்டு சங்க தலைவர் முரளிதரன் துவக்கி வைத்தார். இந்த போட்டிகளில் தகுதி பெறும் முதல் எட்டு வீரர்கள் தமிழக சார்பில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். 

கடந்த ஆண்டு மாநில அளவிலான ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ்  போட்டிகளில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சரன்ராஜ் மற்றும் பிரேம் பிரகாஷ் வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது. பத்து நாள் நடைபெறும் இப்போட்டிகளை தமிழ்நடு  ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் அசோசியேசன் துணை தலைவர் ஹரிஹரன் துவக்கி வைத்தார். மேலும் துணை செயலாளர் நடராஜ் பொருளாளர் சிவக்குமார் மற்றும் கோவை மாவட்ட செயலாளர் பிரேம் பிரகாஷ் மற்றும் மதுரை மாவட்ட செயலாளர் பார்த்திப ராஜேந்திரன் உள்ளிட்டோர் போட்டியின் துவக்கவிழாவில் கலந்துகொண்டனர்.

Loading