நாள்தோறும் பெட்ரோல் விலையெறி வரும் நிலையில் மின்சார வாகன பயன்பாட்டின் தேவையும் அதிகரித்து வருகிறது. இன்னிலையில் கோவை கொடிசியா வளாகத்தில் ஆட்டோ மோட்டோ கண்காட்சி துவங்கியது. இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறும் இக்கண்காட்சி பொதுமக்களுக்கு மின்சார வாகனங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், சந்தையில மின்சார பேட்டரியின் உதவியில் இயங்கும் வால்வோ, ஆடி, பி.எம்.டபுள்யு, லெக்சஸ், வோக்ஸ்வாகன், போர்ஷே, ஹோண்டா உள்ளிட்ட கார்களும், கவாசகி, யமஹா, சுசுகி போன்ற இருசக்கர வாகனங்களும், ஃபோர்ஷ் டிராவலர் வாகனங்கள் காட்சிபடுத்தபட்டு இருந்தது.
இக்கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட எல்காட் இயக்குனர் அருண் ராஜ் IAS அதிகாரி வால்வோ சி-40 என்ற மின்சார வாகனத்தை அறிமுகம் செய்து வைத்தார். இந்த கார் தமிழகத்தில் முதன் முறையாக கோவை அறிமுகம் செய்யபட்டது என குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்டோ மோட்டோ எக்ஸ்போ ஆண்டனி, இந்த கண்காட்சியில் 60 வகையான பிராண்ட் கார் பங்கேற்று உள்ளதாகவும் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு கார்களை பார்வையிட்டு வருவதாகவும், எக்ஸ்போவில் மின்சாரம் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு அதிகளவில் முக்கியத்துவம் அளித்து இருப்பதாகவும் கோவையில் அதிகளவில் இரு சக்கர வாகனங்கள் உற்பத்தி இருப்பதாக கூறினார்.
கல்லூரி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்களுக்கு ஸ்டால்கள் அமைத்து கொடுத்து இருப்பதாகவும் இங்கு இடம் பெற்று இருக்கும் வாகனங்கள் மின்சாரத்தில் இயக்க கூடிய வாகனம் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய IAS அதிகாரி அருண் ராஜ், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த கண்காட்சி கண்டு பயன்பெற வேண்டும் என்றும் அனைத்து கார் ரகங்களும் இங்கு இருப்பதாக தெரிவித்தார். இனி வரும் காலங்களில் அதிகளவில் மின்சார வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கும் என்று கூறினார்.பொதுமக்களுக்கு மின்சாரம் வாகனம் குறித்து அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்று கூறினார். மின்சார வாகனங்களில் மொபைல் போனில் சார்ஜ் போடுவது போல் கார்களும் சார்ஜ் போடுக்கொள்ளலாம் என தெரிவித்தார்.
Leave a Reply