“உலக மின்சார வாகன தினம்” ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 9ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. தற்போது மின்சார வாகனங்கள் பயன்படுத்தும் தேவையும் ஏற்பட்டுள்ளது. காரணம் உயர்ந்து வரும் பெட்ரோல் விலை ஒரு புறம் என்றாலும், மாறிவரும் பருவநிலை மாற்றத்தை சமாளிக்க வேண்டும் என்பதும் முக்கியமாக பார்க்கபடுகிறது. இன்னிலையில் சுற்று சூழலை பாதிக்காத வகையில் உள்நாட்டிலேயே “ஆத்ம நிர்பார் பார்த்” திட்டத்தில் உருவாக்கபட்ட மின்சார வாகனங்களின் பேரணி கோவையில் நடைபெற்றது.
கோவை பந்தைய சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற பேரணியின் துவக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, கோவை மாநகராட்சி ஆனையர் பிரதாப் மற்றும் கோவை மாநகர காவல் ஆனையர் பாலகிருஷ்ணன் மின்சார வாகன பேரணியை கொடியேசைத்து துவங்கி வைத்தனர். முன்னதாக அணிவகுத்து நின்ற வாகனங்களை பார்வையிட்ட வாகனங்களின் செயல்பாடுகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆனையர் இருவரும் மாணவர்களால் உருவாக்கபட்ட ஸ்போர்ட்ஸ் பைக்கை இயக்கி பார்த்தனர்.
இப்பேரணியில் கோவை மற்றும் பிற இடங்களில் உள்ள மின்சார வாகனங்கள் உற்பத்தி நிருவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களிலிருந்து மாணவர்கள் தயாரித்து உருவாக்கிய மின்சார சக்தியில் இயங்கும் பைக்குகள், சொகுசு கார்கள், ஸ்போர்ட்ஸ் பைக், கார்கள், டிராக்டர்கள் மற்றும் கனரக டிரக்குகள் பேரணியில் வலம் வந்தன. எஸ்.எஸ்.இ.எம் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த பேரணி மின்சார வாகனங்கள் பயன்பாட்டை அதிகரிக்க செய்து சுற்று சூழல் பாதிப்பிற்கு தீர்வு கண்டு எதிர்கால சந்ததிகளுக்கு சுத்தமான சூழலை உருவாக்குவது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
Leave a Reply