திருமண விழாக்களுக்கான கண்காட்சி “WEDDING TODAY” வருகின்ற 30ம் தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெறுகிறது.

திருமண விழாக்களில் மேடை, பந்தல், நகைகள், ஒளிப்பதிவு, புகைப்படம், உணவு என அனைத்திற்கும் தனித்தனியே ஏற்பாடுகின்ற நிலையில் அனைத்தும் ஒருங்கே ஒரே கூறையின் கீழ் கிடைக்கும் வகையிலான கண்காட்சியை கோவையில் நடத்த திட்டமிட்டுள்ளது (THE EVENT MANAGERS ASSOCIATION) அமைப்பு. வருகின்ற செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2 வரை கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் இக்கண்காட்சிகான லோகோ வெளியீட்டு விழா கோவை தி ரெசிடெண்சி ஹோட்டலில் நடைபெற்றது. 

இதில் கலந்துகொண்ட கோவை பிரபலங்கள் “WEDDING TODAY”  என்ற லோகோவை வெளியிட்டனர். இதனை தொடர்ந்து திருமண ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண கோலத்தில்  மேடையை அலங்கரித்து இளம் பெண்கள் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை அசத்தினர். பேஷன் ஷோ என்றாலே

கவர்ச்சிகரமான  உடைகளை அணிந்து வரும் மாடல்கள் ஃபேசன் ஷோவில் அணி வகுத்து நடந்து பார்வையாளர்களை வசப்படுத்திய நிலையில்  சமீப காலமாக ஆடை அணிவகுப்பு குழந்தைகள், பெரியவர்கள், கர்பிணிகள் என பல தரப்பினருக்கும் கலந்துகொள்ளும் வகையில் நடத்தபட்டு வருகிறது.

இன்னிலையில் பிரைடல் ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் மணப்பெண் அலங்காரத்தில் வண்ண வண்ண பட்டாடையுடன் மேடையில் தோன்றி பூனை நடை நடந்து பார்வையாளர்களை தன்வசப்படுத்தினர். 

வழக்கமாக நவீன ஆடைகளுடன் இளம்பெண்களை ஃபேசன் ஷோவில் பார்த்து பழகியவர்கள், பட்டு புடவை, அணிகலன்களுடன் தலையில் பூச்சூடிய பெண்கள் மணக்கோலத்தில் ஃபேஷன் ஷொவில் ஒய்யார நடை போட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Loading