தமிழ்நாடு தொடக்ககல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு டிட்டோ-ஜாக் கோவை மாவட்டம் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் கலந்துகொண்ட தொடக்ககல்வி ஆசிரியர்கள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும், கோரிக்கை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
குறிப்பாக எண்ணும் எழுத்தும் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும், புதன் மற்றும் வெள்ளி மாணவர்களை மதிப்பீடு செய்வது போன்ற பணியை முற்றிலும் நீக்க வேண்டும், ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்களை கொண்டு பள்ளி மாணவர்களை ஆய்வு செய்ய உட்படுத்த கூடாது, விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்ககூடாது, பள்ளி மேலாண்மை குழுக்கள் கூட்டம் ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை மட்டுமே கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆசிரியர்களை கருத்தாளர்களாக நியமிக்க கூடாது, EMIS பணியிலிருந்து ஆசிரியர்களை முழுமையாக விடுக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். தொடக்ககல்வி ஆசிரியர்களின் இப்போராட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Leave a Reply