கோவையில் வழக்கு ஒன்றில்  நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வந்த மூவரை சரமாரியாக அறிவாளால் தாக்கி தப்பியோடிய கும்பல் வெறிச்செயல்.

கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பெண் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளான ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் ,சைமன் மற்றும் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரித்திஷ் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட நிலையில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அந்த வழக்கின் விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில் இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி உள்ளனர். 

இதனிடையே மூவரையும் நீதிமன்ற வளாகத்தில் இருந்து சிலர் பின் தொடர்வதை அறிந்த மூவரும் அங்கிருந்து அவிநாசி சாலை மேம்பாலம் வழியாக காட்டூர் பகுதிக்குள் நுழைந்து தப்ப முற்பட்டனர்.தொடர்ந்து அவர்களை மூன்று இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்த ஒன்பது பேரும் ராம்நகர் ராமர்கோவில் சாலையில் வைத்து ஏற்கனவே தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவால் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்ட  துவங்கியுள்ளனர்.

இதையடுத்து வாகனத்தில்  இருந்து இறங்கிய மற்றும் சைமன் ஆகியோர் ஓட துவங்கவே இருவரையும் விரட்டி வெட்டிய கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடினர். தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் வெட்டிய கும்பலை சேர்ந்தவர்கள் அடையாளம் காண்ப்பட்டுள்ளனர்.கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவரும் ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடையவருமான ரவி என்பவர் தலைமையிலான கும்பல் முன்விரோதம் காரணமாக சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.தொடர்ந்து சம்பவம் தொடர்பாக காட்டூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Loading