அசைவ உணவின் பாரம்பரிய மிக்க சுவை என்று வாடிக்கையார்களிடையே நன்மதிப்பை பெற்றுள்ள, சேலம் ஆர் ஆர் பிரியாணி உணவகத்தின் கோவை கிளையின் துவக்க விழா கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலை பகுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட “சேலம் ஆர்.ஆர் பிரியாணி ஹவுஸின் உரிமையாளரும், விவசாய உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பவர் என்று மத்திய அரசின் விருதினைப் பெற்ற சேலம் ஆர். தமிழ்ச்செல்வன் ரிப்பன் வெட்டியும், குத்துவிக்கேற்றியும் துவக்கி வைத்தார்.
அங்கு தயாரிக்கப்படும் உணவின் தயாரிப்புகளை சமையல் கூடத்திற்கே சென்று பார்வையிட்டவர், பணியாளர்களிடம் உணவு சமைப்பது குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து சேலம் ஆர்.ஆர் பிரியாணி கோவை கிளையின் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். மேலும் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வறுமையின் காரணமாக பத்து வயதில் ஹோட்டலில் டீ கிளாஸ் கழுவிக்கொண்டிருந்த நான், ஹோட்டல் தொழிலே வேண்டாம், மூட்டை தூக்கியாவது பிழைத்துக்கொள்ளலாம் என்று சென்னைக்கு ஓடினேன், ஹோட்டல் தொழிலே வேண்டாம் என்று ஒதுக்கிய, என்னை, நீ உழைக்கப் பிறந்தவன், அதிலும் ஹோட்டல் தொழில்தான் உனக்கு சிறப்பாக இருக்கும், என்று காலம் போட்ட கணக்கு தப்பாமல், இன்று அந்த தொழிலில் பேர் சொல்லும் பிள்ளையாக மட்டுமின்றி, ஊர் சொல்லும் பிள்ளையாக உயர்ந்து நிற்கிறேன் என்றார்.
சென்னை முழுக்க 30-க்கும் மேற்பட்ட கடைகளை நடத்தி வரும் நிலையில், எனது தனி அயராத உழைப்பும், நான் பட்ட அவமானங்களை தாண்டி இன்று இங்கு கோவையில் முதல் கிளையை துவக்கியுள்ளதாவும், இளம் தலைமுறையினருக்கு நான் கற்று கொடுக்க விரும்புகிறேன், அவர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க இருக்கிறேன் இதற்காக கேட்டரிங் கல்லூரி நடத்த திட்ட மிட்டு உள்ளதாகவும், தெரிவுத்தார், கோவையில் இன்று தனது 38 வது கிளையை துவக்கி உள்ளதாக கூறிய அவர், பிரியாணிக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் கடைகளில் வாங்காமல், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து விவசாயிகளையும் எனது தொழில் மூலமாக வாழவைப்பதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply