ஆறு மணிக்கு முன்பு ஒரு மாதிரியும், ஆறு மணிக்கு பின்பு ஒரு மாதிரியும் பேசும் சி.வி.சண்முகம் நேர்மையை பற்றி பேசுவதா???

கோவை பாஜக தெற்கு மாவட்டம் சார்பாக பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு 73 ஜோடிகளுக்கு 73 சீர்வரிசையுடன், தமிழ் முறைப்படி சிவனடியார் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும் 2 ஜோடிகள் கூடுதலாக வந்ததையடுத்து, 75 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திருமணத்தை  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பாரத பிரதமரின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு 73 ஜோடிகளுக்கு 73 சீர்வரிசைகளோடு நாட்டு பசு மாடுகள் வழங்கி திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் இன்று காலை கூடுதலாக இரண்டு ஜோடிகளுடன் சேர்த்து மொத்தம் 75 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். மத்திய ஜல் சக்தி துறை அமைச்சருக்கு தமிழக பாஜக சார்பில், கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்  உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக கூறப்பட்டிருப்பது போல் காவிரி நீரை தமிழகத்திற்கு வழங்க வேண்டும், ஆனால் கர்நாடகா தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறது நிச்சயமாக கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கியே ஆக வேண்டும். 

உச்சநீதிமன்றத்திலும் தீர்ப்பு நமக்கு சாதகமாக தான் வரும் அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் பிரச்சனை செய்து தண்ணீர் வாங்கினால் அதுவும் பிரச்சினையாக தான் அமையும் ஏனென்றால் கர்நாடகாவிலும் தமிழர்கள் உள்ளார்கள் நம்முடைய எல்லைப் பகுதிகளில் கன்னட மொழி பேசும் மக்களும் உள்ளார்கள். எனவே இந்த பிரச்சனைகள் எல்லாம் இல்லாமல் இரண்டு மாநில அமைச்சர்களும் பேசி தீர்த்து இருக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக மௌனமாக இருந்ததால் நிலைமை கைமீறி மத்திய அரசிற்கு சென்று விட்டது. எனவே தமிழகத்திற்கு சாதகமாக முடிவு வரும் என்பதில் எள்ளளவு கூட பாஜகவிற்கு சந்தேகம் இல்லை. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உங்களுடைய (அண்ணாமலை) நடைபயணம் குறித்து விமர்சித்திருப்பது குறித்தும் அதிமுக துணையில்லாமல் பாஜக வெற்றி பெற முடியாது என்று பேசியது குறித்தும் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், “நல்ல போலீஸ்காரர்களை பார்த்தால் திருடனுக்கு பயம் வரத்தான் செய்யும் தேள் கொட்டியது போல தான் இருக்கும் அதுதான் என்னுடைய பதில். தரத்தை தாழ்த்தி நான் எப்பொழுதும் அவதூறான வார்த்தைகளை முன்வைக்க மாட்டேன். அரசியல் களம் மாறிவிட்டது என தலைவர்கள் புரிந்து கொள்கிறார்கள் இது இளைஞர்களுக்கான அரசியல் இன்னும் பழைய பஞ்சாங்கத்தை பேசிக் கொண்டிருந்தால் ஓட்டு போட முடியாது. எப்படிப்பட்ட தலைவர்கள் வரவேண்டும் என இளைஞர் சக்தி தீர்மானிக்கிறது தமிழகத்தில் அந்த மாற்றம் வந்தே தீரும் அதனால் நல்ல ஒரு போலீஸ்காரனை பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போல் இருப்பது சகஜம் தான் இதுதான் என்னுடைய பதில்” என தெரிவித்தார். 

என்னிடம் மிரட்டல் உருட்டல் எல்லாம் வேலைக்கு ஆகாது. எனக்கும் கடும் சொற்கள் வரும். சிவி சண்முகம் ஆறு மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார் ஆறு மணிக்கு பின்பு ஒரு மாதிரி பேசுவார் என எனக்கு தெரியும், காவல்துறையில் துப்பாக்கி பிடித்த கை இது எனவே நேர்மையை பற்றி சிவி சண்முகம் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். அவர் மந்திரியாக இருக்கும் பொழுது என்னென்னவெல்லாம் செய்தார் என்பது எனக்கு தெரியும் அதற்குள் எல்லாம் நான் போகவில்லை. என்னை பொறுத்தவரை என்னுடைய நேர்மையை கொச்சைப்படுத்தினால் யாராக இருந்தாலும் நான் விடமாட்டேன் இது என்னுடைய தன்மான பிரச்சினை. கூட்டணி தேவைதான் ஆனால் அதற்காக அடிமையாக இருக்க முடியாது. கூனி கும்பிட்டு பதவிக்கு வந்தீர்கள் என்றால் அப்படிப்பட்ட அவசியம் பாஜகவிற்கு கிடையாது. பாஜக தனித்தன்மையாக பவருக்கு வரும், 2026ல் வரும். அதுவும் பாஜக வாக மட்டும் தான் வரும் இன்னொரு கட்சியின் clone ஆகவோ பி டீமாகவோ சி டீமாகவோ வராது. எதையும் ஆட்டை போடுவதற்காக நான் வரவில்லை சனாதான தர்மத்தையும் தமிழ் கலாச்சாரத்தையும் காப்பதற்காக அரசியலுக்கு வந்தவன் நான் எனவே என் பேச்சு சூடாக தான் இருக்கும். யாருக்கும் பாரதிய ஜனதா கட்சி தலைவணங்காது எங்களை பொறுத்தவரை அனைவரும் சமம் என்றார்.

Loading