1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ம் தேதி நடந்த இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் 21 தியாகிகள் சுட்டு கொல்லப்பட்டனர். துப்பாக்கி தோட்டாக்களை தங்களது நெஞ்சில் சுமந்து அதில் வீர மரணமடைந்த 21 தியாகிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழகம் முழுவதும் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை கிழக்கு மாவட்ட பாமக மற்றும் கோவை மாவட்ட வன்னியர் சங்கம் சார்பிலும் கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இன்னிகழ்வில் வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமகவினர் மெழுகு வர்த்தி ஏந்தியும் 21 தியாகிகளுக்கு மலர்தூவியும் வீரவணக்கம் செலுத்தினர். இந்நாளில் மருத்துவர் அய்யா, மற்றும் அன்புமணி ராமதாஸ் கரத்தை வலுப்படுத்துவோம் எனவும் சூளுரைத்தனர். இதில் பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் கோவை ராஜ், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், மாவட்ட தலைவர் கனகராஜ், வன்னியர் சங்க துணை செயலாளர் ரவி, வினோத் மற்றும் சிவானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Leave a Reply