கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கு “பாலியேட்டிவ் கேர்” மையம் திறப்பு.

கேஎம்சிஹெச் மருத்துவமனையில் உலகத்தரமான அதிநவீன

புற்றுநோய் மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் 2011-ம் ஆண்டு துவக்கப்பட்டது. புற்றுநோயுடன் மனவுறுதியுடன் குணமடைந்தவர்களையும் நோயிலிருந்து மீண்டுவர அவர்களுக்கு உதவிகரமாக செயல்பட்டவர்களை பாராட்டும் வகையிலும் புற்றுநோயாளிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையிலும் வருடா வருடம் ரோஸ் தினம் கொண்டாடப்படுகிறது. 

ரோஸ் தினமானது கேஎம்சிஹெச் மருத்துவமனையில் தொடர்ந்து 11-வது ஆண்டாக கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.  தைரியத்துடனும்

புற்றுநோயாளிகள் நம்பிக்கையுடனும் வாழ்க்கையை எதிர்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த வருட “ரோஸ் தினம்”, “புதிய பாதை, புதிய நம்பிக்கை” என்ற கருத்தாக்கத்துடன் கொண்டாடப்படுகிறது. 

புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு சிறப்பு கவனத்துடன் கூடிய சிகிச்சை அளிப்பதற்காக பாலியேட்டிவ் கேர் என்ற பிரத்யேக மையம் துவக்கப்பட்டுள்ளது. 

ரோட்டரி கிளப் கோயமுத்தூர் மெரிடியன் மற்றும் ஆட்டிடியூட் சாரிடபிள் டிரஸ்ட் ஆகிய இரண்டும் அமைப்புகளும் மருத்துவமனையுடன் இணைந்து தி கார்டியன்’ என்ற திட்டத்தின் கீழ் புற்றுநோய் கேஎம்சிஹெச் பாதித்த ஏழை எளிய மக்களுக்கு பாலியேட்டிவ் கேர் கட்டணமின்றி அளித்திட முன்வந்துள்ளது. இம்மையத்தை கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி மற்றும் உதவி தலைவர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி இந்த  துவக்கிவைத்தனர். கேஎம்சிஹெச் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைந்திருக்கும் இந்த வார்டில் நோயாளிகளுக்கு சலுகை கட்டணங்களில் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. 

Loading