ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25ம் தேதியன்று “உலக மருந்தாளுனர்கள் தினம்” கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பிற்காக மருந்தாளுநர்களை அங்கீகரித்து கௌரவிக்கும் ஒரு பிரத்யேக நிகழ்வாகக் கொண்டாடப்படுகிறது. இன்னாளில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், விருது வழங்கும் நிகழ்ச்சிகளும் வழங்கபடுகிறது.
இன்னிலையில் சென்னையை சேர்ந்த மருந்தாக்கியல் கல்லூரி, ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (BIHER) சார்பாக உலக மருந்தாளுநர் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டதுடன் மருந்தாளுனர்கள் பற்றிய விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது. இப்பேரணியை கல்லூரி நிறுவனர் எஸ். ஜெகத்ரட்சகன், தலைவர் ஜெ. ஸ்ரீநிஷா, நிர்வாக இயக்குனர் என்.இளமாறன் கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தனர்.
கல்லூரி முதல்வர் முனைவர் என்.தீபா தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் பேராசிரியர்கள் மற்றும் துறைத் தலைவர்கள், இணைப் பேராசிரியர்கள், மாணவர்கள், மற்றும் சுகாதார வல்லுநர்கள் உட்பட சுமார் 300 மேற்பட்டோர் பங்கேற்றனர். உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பில் மருந்துகளின் பயன்பாடு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மருத்துவத் துறையில் மருந்தாளுனர்களின் பங்களிப்பு மற்றும் முக்கித்துவம் குறித்து பொது மக்கள் அறியும் வண்ணம் கையில் பதாகை ஏந்தி மாணவ மாணவிகள் பேரணி சென்றனர். பேரணி குரோம்பேட்டை பேருந்து நிலையத்திருந்து தொடங்கி கல்லூரி வளாகத்தில் முடிவுற்றுது.
பேரணியைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சீகோ லேப்ஸ் தலைவர் திரு.எஸ்.சிவானந்தன் மருந்து பயன்பாடு மற்றும் பக்க விளைவுகள் குறித்து சிறப்பாக உரையாற்றினார். அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கருதி மரம் நடும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன. கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வெற்றி பெற்றோர்க்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply