சிறுவர்கள் இதய நோயினால் பாதிப்படைவது, மற்றும் சிறுவர்களுக்கு வரும் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் கோவையில் நடைபெற்றது.

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனை சார்பில், சிறுவர் சிறுமியர்களுக்கு இதய நோய், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு மாராத்தான் நடைபெற்றது. 10 கிலோ மீட்டர் மாரத்தானில், 18 வயதுக்கு  மேற்பட்ட ஆண்களும், பெண்களும், ஐந்து கிலோமீட்டர் மாராத்தானில், 12 இல் இருந்து 18 வயது உள்ளோரும், மூன்று கிலோ மீட்டர் மற்றும் ஒரு கிலோமீட்டர் மாரத்தானில், ஒன்று முதல் மூன்று வயது உள்ள சிறுவர் சிறுமிகளும் கலந்து கொண்டனர். 

மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாராத்தானை, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி மற்றும் ஜிகேஎன்எம் மருத்துவமனையின் முதன்மை நிர்வாக அலுவலர் ரகுபதி வேலுச்சாமி அவர்களும்  கொடியசைத்து துவக்கி வைத்தனர். கோவையின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த மாரத்தானில் 10 கிலோமீட்டர் மாரத்தானில் ஓடி வெற்றி பெற்றவர்களுக்கு 50,000 மதிப்புள்ள ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இந்த மாரத்தானில் மாற்றுத்திறனாளிகளும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading