நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி எதிர் வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை – கேபி முனுசாமி திட்டவட்டம்.

கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் கேபி முனுசாமி அப்போது, சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகளை புரிந்து தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணியை விட்டு வெளியேற்றியதுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிதாக அறிவிக்கபட்டது. இந்த நிலையில் சில ஊடகங்களும் பத்திரிக்கை ஆலோசகர்களும், அரசியல் விமர்சகர்களும் அதிமுக மீண்டும் தேர்தல் நேரத்தில் பாஜக உடனான கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ளும் என கூறுகின்றனர். அதற்கு முடிவுரை எழுதவே இந்த செய்தியாளர் சந்திப்பை ஏற்படுத்தி உள்ளேன். இனி எந்த சூழலிலும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் எதிர் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்றார். 

தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களது தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் என்றும் அவர் கூறினார்.

குறுகிய காலத்தில் தமிழகத்தில் புரட்சியை ஏற்படுத்தி ஆட்சி அமைத்த பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களை விமர்சிக்க கூடிய ஒரு கட்சியை குறைந்தபட்சம் கண்டனம் கூட தெரிவிக்காத திமுக அரசு மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு கொள்கை பற்றி பேச என்ன அருகதை உள்ளது என அவர் கேள்வி எழுப்பினார். மேலும் இந்திராகாந்தி அம்மையார் பிரதமராக இருந்த போது மிசா சட்டத்தில் தமிழகத்தில் திமுக தலைவர் கருணாநிதி முதல் அவரது மகன் ஸ்டாலின் வரை கைது செய்யப்பட்டனர். 

மிசா நாயகன் என பட்டம் சூட்டிக்கொண்ட ஸ்டாலின் அப்போதெல்லாம் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து விட்டு இன்று காங்கிரஸ் உடனடியாக கூட்டணியை அவர்கள் எப்படி வைத்துள்ளனர் என கேள்வி எழுப்பிய கே.பி.முனுசாமி கொள்கையை பற்றி பேச ஸ்டாலினுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த தகுதியும் கிடையாது என அவர் கூறினார்.

இதேபோல் பிரதமர் வேட்பாளரை பொருத்தவரையில் எப்படி ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா ஏன் இப்பொழுது இந்தியா கூட்டணி என சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ்  திமுக கட்சியினர் யாரை பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தி தேர்தலை சந்திக்கிறார்கள் என கேள்வி எழுப்பிய அவர், அதே போல தான் தமிழகத்தில் அதிமுக நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கப் போகிறோம் எங்களைப் பொறுத்தவரையில் தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்கள்தான் எங்களுக்கு எஜமானர்கள் அந்த வகையில் தேர்ந்தெடுக்கப்படும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் யார் தமிழகத்தில் உரிமைக்காகவும் நலனுக்காகவும் தமிழகத்திற்கு வரக்கூடிய நிதி உரிமையை பெறுவதற்காகவும் போராடுவோம் குரல் கொடுப்போம் என அவர் தெரிவித்தார். 

தற்பொழுது தேசிய ஜனநயக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியது என்ற அறிவிப்பை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது தமிழகத்தில் திமுக உடனான கூட்டணியை அவர்கள்  உறுதிப்படுத்திக்கொள்ள அதிமுக அறிவிப்புக்கு அடுத்த நாளே திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளனர் என கூறினார். தமிழகத்தில் அதிமுக உடனான கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் அவை காலமும் நேரமும் தான் நிர்ணயிக்கும் என கூறினார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பு போது கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் நகர கழக செயலாளர் கேசவன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் உடனிருந்தனர்.

Loading