அக்டோபர் 31ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்துபவர்களுக்கு 5% ஊக்கத்தொகை – மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு.

கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-24ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை 31.10.2023க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் (முழு கூடுதல் பொறுப்பு) செல்வசுரபி தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “2023-24ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை 31.10.2023க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மேற்படி சொத்துவரி தொகையினை ரொக்கம், கடன் மற்றும் பற்று அட்டை காசோலை மற்றும் வரைவோலை மூலமாக மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களிலும், மேலும் tnurbunepay.tn.gov.in என்ற நகராட்சி நிர்வாக இயக்குநரக இணையதள டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவும் செலுத்தலாம். 

எனவே, மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் மேற்காணும் வசதியினை முழுமையாக பயன்படுத்தி, 2023-24ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான தங்களது சொத்துவரியினை அக்டோபர் 31ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் வரை ஊக்கத்தொகையினை பெற்று பயனடையுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading