கேரளாவில் புகழ்பெற்ற டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் கோவை கிளையை நடிகை ராதிகா சரத்குமார் திறந்து வைத்தார்.

கேரளாவில் புகழ்பெற்ற டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை. கேரளாவில் பாலக்காடு, கோழிக்கோடு, திருச்சூர், ஆலத்தூர், திரூர் மற்றும் நெம்மாரா ஆகிய இடங்களில் கிளைகளை கொண்டுள்ளது. கண்களை கவனிப்பதில் நிபுணத்துவம், தொழில் அனுபவமிக்க பணியாளர்கள், அன்பும்,  கருணையுடனும்,  கடமையாற்றுவோம், என்ற 3 தாரக மந்திரங்களோடு செயல்படுவோம். கண் பிரச்னைக்கு உலகில் உள்ள தீர்வுகளை கேரளாவிற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் முன்று மருத்துவ துறை நிபுணர்களின் நோக்கமாக டிரினிட்டி துவக்கப்பட்டது.

இன்னிலையில் தமிழகத்தில் தனது முதல் கிளையை கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில் துவங்கியுள்ளது. இதன் துவக்க விழாவில்  வக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகை திருமதி. ராதிகா சரத்குமார் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தார். விழாவில் உரையாற்றிய நடிகை ராதிகா, கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் டிரினிட்டி கண் மருத்துவமனை போன்ற மருத்துவமனை துவங்கிய நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

விழாவில் டிரினிட்டி சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்  ஏ.கே ஸ்ரீதரன், நிர்வாக இயக்குனர்  டாக்டர் சுனில் ஸ்ரீதரன், மருத்துவ இயக்குனர் மற்றும் கார்னியா, கேட்ராக்ட், ரெப்ராக்டிவ் சர்ஜன் டாக்டர் முகமது சபாஜ், துணைத் தலைவர் (இயக்கம்) ஜான்சன் விஜய் மேத்யூ, தலைமை நிர்வாக அதிகாரி ஜாஸ்மின் மற்றும் தலைமை இயக்க அதிகாரி குணசீலன் பிள்ளை, விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை கே ஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கே ஜி பக்தவச்சலம், அன்னபூர்ணா நிறுவனங்களில் தலைவர் ராமசாமி, ஸ்ரீனிவாசன், முன்னாள் மேயர் காலனி வெங்கடாசலம், வேதநாயகம் மருத்துவமனை டாக்டர் கந்தசாமி, வழக்கறிஞர்கள் நாகசுப்பிரமணியன், சுந்தரவடிவேலு மற்றும் மகாவீர்ஸ் டெக்ஸ்டைல்ஸ் தலைவர் பால்சந் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Loading