அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டியானது வரும் 7ம் நடத்தப்பட உள்ள நிலையில் இதற்காக விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர், பொது மக்களிடையே உடன்தகுதி கலாச்சாரத்தை புதுப்பிக்கும் வண்ணம் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்ட போட்டியானது ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் நிலையில் இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் வருகின்ற (07.10.2023) சனிக்கிழமை நடத்தப்படவுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முன் துவங்கி எல்ஐசி அண்ணா சிலை வழியாக மீண்டும் நேரு விளையாட்டு அரங்கை வந்தடையுமாறு இந்த ஓட்ட போட்டியானது நடத்தப்பட உள்ளது. இதில் 17 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு 8 கிலோமீட்டர் பெண்களுக்கு 5 கிலோமீட்டர், 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கிலோமீட்டர் பெண்களுக்கு 5 கிலோமீட்டர் என நடத்தப்பட உள்ளது.

போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களது வயது சான்றிதழ் வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரி ஆதார் சான்றிதழ்களை (06.10.2023) மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போட்டியில் முதல் பரிசாக 5000 ரூபாய் இரண்டாம் பரிசாக 3000 ரூபாய் மூன்றாம் பரிசாக 2000 ரூபாய் நான்கு முதல் பத்து இடங்களில் வருபவர்களுக்கு தலா 1000 ரூபாய் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply