கே.ஜி.கல்லூரி சார்பில் மாணவர்கள் வெளிநாட்டு கலாச்சாரம், தொழில்நுட்பத்தை அறியும் வகையில் ஸ்பேனிஷ் திரைப்பட விழா நடைபெற்றது.

கோவை சரவணம்பட்டியில் கேஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பியல் துறை சார்பில் ஸ்பேனிஷ் திரைப்பட விழா இன்று நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் ஐ.சி.ஏ.எப் அமைப்பின் சென்னை பொது செயலாளர் தங்கராஜ் மற்றும் இயக்குனர் அமுதவானன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக  கலந்து கொண்டனர். காட்சி தொடர்பியல் துறை பயிலும் மாணவர்கள் மற்ற நாட்டு மொழி, கலாச்சாரம் மற்றும் தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளும் வகையில் “The secret in their eye’s, welcome Mr.marchall, Martin, Breeding Ravens” போன்ற நான்கு சர்வதேச விருதுகள் வென்ற திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. 

ஐ.சி.ஏ.எப் அமைப்பின் சென்னை பொதுச்செயலாளர் தங்கராஜ் கூறும்போது, நீங்கள் மற்ற மொழி திரை படங்களையும் பார்க்க வேண்டும் ஏனெனில், அவர்கள் எப்படி திரைப்படத்தை இயக்கிய விதம், தொழில் நுட்பங்களை அறிந்துகொள்ள முடியும். மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள இந்த போன்ற  திரைப்பட விழா உதவுகிறது. மேலும் 21வது சர்வதேச திரைப்பட விழா சென்னையில் டிசம்பர் மாதம் நடத்த உள்ளதாகவும் தகவல் தெரிவித்தார்.

இயக்குனர் அமுதவாணன் பேசும்போது, நாங்கள் நல்ல படங்களை பார்க்க வேண்டும் என்றால் திரைப்பட விழாவிற்காக காத்திருக்க வேண்டும். ஆனால் உங்களுக்கு கல்லூரியிலேயே திரையிடுகிறார்கள். ஒவ்வொரு படங்களையும் நீங்கள் பார்க்க வேண்டும். ஒவ்வொரு படத்திற்கும் என்ன என்ன வேறுபாடுகள் உள்ளது என்று உங்கள் பார்வையில் பார்க்க வேண்டும் என்றார். வாழ்கையில் நீங்கள்  கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் நிறைய பேச வேண்டும், 

உங்கள் பலம் என்ன என்பதை உணர்ந்து நீங்கள் அதில் முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும். திரையரங்கில் ஓடினால் மட்டுமே ஒரு படம் வெற்றி என்று அர்த்தமில்லை. தயாரிப்பாளருக்கு அதில் லாபம் கிடைத்தாலே அது வெற்றி தான் என்றார். இத்திரைப்பட விழாவில்  கல்லூரி முதல்வர் ரத்தினமாலா, துறை தலைவர் சார்லஸ் மற்றும் பல்வேறு கல்லூரியை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Loading