மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்தியபல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ,மாணவிகள் 2023- 2024 -ம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை (Fresh and Renewal applications) விண்ணக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம்,ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ/ மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணவ/ மாணவியர் ஒருவருக்கு ஆண்டிற்கு அதிக பட்சம் ரூ.2.00 இவட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்படி கல்வி உதவித்தொகைக்கு 2023- 2024- ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் {Fresh and Renewal applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship schemes என்ற இணையதள முகவரியிலிருந்தோ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் மேற்படி 2023-2024-ஆம் நிதியாண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றெப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்,எழிலகம் இணைப்புகட்டடம், 2வது தளம்,சேப்பாக்கம்,சென்னை தொலைபேசி எண்.044-28551462, மின்னஞ்சல் முகவரி, tngovtitscholarship@gmail.com என்ற மூகவரிக்கு பூர்த்தி செய்து புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை 15.12.2023 க்குள் மற்றும் புதியது (Fresh) விர்லாப்பங்களை 15.01.2024-க்குள் அனுப்பி வைக்கவேண்டும். இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்குமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண்: 0422-2300404 மற்றும் மின்னஞ்சல் முகவரி dbcwocbe@gmail.com- ல் விவரம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply