மாற்றுத் திறனாளிகள், ராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் “ஐயாம் ஸ்பெஷல்” காலண்டர் வெளியீடு.

மாற்று திறனாளின் திறமைகளை வெளிக்கொண்டு வரும் விதமாகவும் அவர்களுக்கு உதவும் விதமாகவும் செயல்பட்டு வரும் “ஸ்வர்கா அறக்கட்டளை” தனது 9வது ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாற்றும் திறனாளிகளாக இருந்து சாதனை படைத்தவர்களை மாடலாக கொண்டு காலண்டர் வெளியிட்டு வருகிறது.

இன்னிலையில் 2024 ஆண்டுக்கான “ஐயாம் ஸ்பெஷல் காலண்டர்”  வெளியீடு நிகழ்ச்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் நாட்டுக்கு சேவைபுரியும்போது ஏற்பட்ட சம்பவங்களில் உடல் உறுப்புகளை இழந்து வாடும் மாற்றுத் திறனாளி ராணுவ வீரர்களை கௌரவிக்கும் வகையில் இந்தக் காலண்டர் வெளியிடப்பட்டது. 

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கோவை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மாநகராட்சி ஆணையர் பிரதாப், விமானப்படை கட்டளை அதிகாரி கேப்டன் அமித் கவுர், ராணுவம் தலைமையகம் நிர்வாக கமாண்டன்ட் லெப்டினன்ட் கர்னல் பிஜு, தகவல் தொடர்புத் தலைவர் ஐஎன்எஸ் அக்ராணி கேப்டன் பி.கே.பிரகாஷ் ஆகியோர் பங்கேற்று காலண்டரை வெளியிட்டனர்.

Loading