இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறும் மனுதாரர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியற்றவர்களுக்கு மாதம் ரூ.200/- பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300, பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரி மற்றும் முதுநிலைப்பட்டதாரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ600 மனுதாரர்களின் வங்கிக் கணக்கில் ECS மூலம் ஒவ்வொரு காலாண்டிற்கும் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் 31.12.2023 உடன் முடிவடையும் காலாண்டிற்கு, புதியபயனாளிகள் கண்டறியப்படுகிறது. இந்த உதவித்தொகையைப் பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இந்தாண்டுகளுக்கு மேல் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவராக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி மனுதாரர்களுக்கு ஓராண்டு நிறைவடைந்திருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு வரை தேர்ச்சியற்றவர்களுக்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600. பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ750, பட்டதாரி மற்றும் முதுநிலைபட்டதாரி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1000. மாதந்தோறும் வழங்கும் திட்டம் அமலில் உள்ளது.
2023ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதிற்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமாணம் ரூபாய் 72,000. மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவுநாரர்களுக்கு கவருமான உச்சவரம்பு இல்லை மனுதாரர் பள்ளி அல்லது கல்லூரிப் படிப்பை தமிழகத்திலேயே முடித்து இங்கேயே 15 ஆண்டுகள் வசித்தவராக இருக்க வேண்டும். மனுதாரர் முற்றிலுமாக வேலையில்லாதவராக இருக்க வேண்டும்.கல்வி நிறுவனத்திற்கு தினமும் சென்று படிக்கும் மாணவ மாணவியராக இருக்கக்கூடாது. ஆனால் தொலை தூரக்கல்வி மற்றும் அஞ்சல் வழிக்கல்வி கற்கும் மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
மனுதாரர் உதவித்தொகை பெறும் காலங்களில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினைத் தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருக்க வேண்டும். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் மீண்டும் புதிய விண்ணப்பம் சமர்ப்பிக்க தேவையில்லை. மூன்று ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இந்த உதவித்தொகை பெறுவதற்கு தகுதியுடையவர்கள்
https://tnvelaivaaipug.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனை பூர்த்தி செய்து வருவாய் ஆய்வாளரிடம் ஒப்பம் பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மனுதாரர் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply