கோவை மக்களுக்கு உயிர்காக்கும் மருந்துகளை இலவசமாக வழங்கிய பாமகவினர்.

நாடாளுமன்ற உறுப்பினரும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று தனது 55வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதிலும் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கத்தினர் பெரு விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் சார்பில் மருத்துவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை இனிப்பு வழங்கி கோலாகலமாக கொண்டாடினர். 

பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தலைமையிலான பாமகவினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,  செல்வபுரம் மற்றும் கவுண்டம்பாளையம்  உட்பட கோவை மாநகரில் மூன்று முக்கிய சந்திப்புகளில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் அவர்களின் சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி கொண்டாடினர். மேலும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் உள்ள பல தரப்பினர் மற்றும் பொதுமக்களுக்கு மாரடைப்பு வந்தால் உடனடியாக உட்கொள்ள வேண்டிய உயிர் காக்கும் மாத்திரைகள்( Loading dose) வழங்கினர். 

இது குறித்து கோவை பாமக கிழக்கு மாவட்ட் செயலாளர் கோவை ராஜ் கூறுகையில் உயிர் காக்கும் மருந்துகள் தனிப்பட்ட முறையில் வாங்க வேண்டும் என்றால் சுமார் 75 ரூபாய் வருகிறது. இந்த மருந்துகளை டாக்டர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் முக்கிய இடங்களிலே இலவசமாக வழங்கி வருகின்றோம் இன்று மட்டும் 300 பேருக்கு மருந்து இலவசமாக வழங்கப்படுகின்றது அடுத்த கட்டமாக ஒவ்வொரு பகுதிகளாக சென்று எல்லோருக்கும்  மருந்துகளை இலவசமாக வழங்கிட உள்ளோம் என்று தெரிவித்தார். இதில் கோவை கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் கோவை ராஜ், மகளிர் அணி செயலாளர் கெளசல்யா, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் மடத்தூர் ரமேஷ் மற்றும் கோபி உள்ளிட்ட பாமகவினர் பலர் கலந்துகொண்டனர்.

Loading