கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட சரவணம்பட்டி 21வது வார்டு, சத்தி சாலையில் ப்ரோ சோன் மால் வணிகவளாக பகுதி மற்றும் சிவானந்தபுரம் பகுதியில் 56 லட்சத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய் பணிகளுக்கு கடந்த மாதம் பூமி பூஜை போடபட்டு பணிகள் துவங்கபட்டு தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ப்ரோஜோன்மாலில் இருந்து வெளியேற 3இடங்களில் கேட் உள்ளது. இதில் 2வது கேட்டின் முன்புறமுள்ளது மழைநீர் வடிகால் கால்வாய்.
சுமார் 25அடி நீளத்திற்கு போடப்பட்ட இந்த கான்கிரீட் கால்வாயை வணிகவளாக நிர்வாகிகள் சேதப்படுத்தியதோடு அப்பகுதியில் போடப்பட்டு இருந்த புதிய தார் சாலையையும் சேதப்படுத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் வணிக வளாகத்திற்கு சென்று விளக்கம் கேட்டதற்கு முறையான தகவலை தர மறுத்து விட்டனர்.
இதனால் மழைநீர் வடிகால் கால்வாயின் கான்கிரீட்டை, சேதபடுத்தியதற்காக வடக்கு மண்டல பொறியாளர் சார்பில் மாநகராட்சி ஊழியர்கள் அபராத தொகையினை கட்ட வேண்டும் இல்லையெனில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் இரண்டு நாட்களுக்குள் இடிக்கப்பட்ட கால்வாயை சரி செய்ய வேண்டும் என்று வணிக வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். ஆனால் அங்கு பணியில் இருந்த நிர்வாகத்தினர் நோட்டீசை,வாங்க மறுத்து வணிக வளாகத்தில் ஒட்ட பட்ட நோட்டீசை கிழித்து எரிந்து மாநகராட்சி ஊழியர்களை அனுப்பி உள்ளனர்.
இதனால் மாநகராட்சி ஊழியர்கள் 21 ஆவது வார்டு கவுன்சிலர் பூங்கொடி சோமசுந்தரம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு புகார் அளித்தனர். இந்த புகார் அடிப்படையில் வார்டு கவுன்சிலர் பூங்கொடி சோமசுந்தரம் மாநகராட்சி ஆணையருக்கு தகவலை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் வணிக வளாக நிர்வாகத்தினர் நோட்டீஸிற்கு பதில் அளிக்கவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
Leave a Reply