கோவை மாவட்டம் எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி, வெள்ளானைப்பட்டி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.32.75 இலட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறைகள் கட்டும்பணி மற்றும் இ.எஸ்.ஐ மருந்தகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், கள்ளிப்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.7.31 இலட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுவரும் பணி, நஞ்சுண்டாபுரத்தில் ரூ.2.63 இலட்சம் மதிப்பீட்டில் சிறிய சமுதாய சுகாதார வளாகம் கட்டும் பணியினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத்தொடர்ந்து கள்ளிப்பாளையம் நியாயவிலை கடையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு. மொத்த குடும்ப, அட்டைகளின் எண்ணிக்கை, குடும்ப அட்டை தாரர்களுக்கு விற்பனை முனைய விநியோகிக்கப்பட்ட விவரம் குறித்த பதிவுகளை இயந்திரத்தினை இயக்கி ஆய்வு செய்ததுடன், இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி, பாமாயில் பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்களையும் கேட்டறிந்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பொருட்களை உரிய நேரத்தில் வழங்கவும் நியாயவிலைகடையின் விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.481 இலட்சம் மதிப்பீட்டில் ஓம் முருகா நகர் மெயின் ரோடு முதல் மேற்கு சக்திவேல் வீடு வரை சாலைகளில் பேவர் பிளாக்குகள் அமைக்கும் பணி. ஊராட்சி பொது நிதி திட்டத்தின் கீழ் ஓம் முருகா நகரில் ரூ 4 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி, 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.5.67 இலட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும். ரூ.140 இலட்சம் மதிப்பீட்டில் உறிஞ்சி குழி (soak pit)அமைக்கும் பணி, வெள்ளானைப்பட்டி போஸ்டல் காலனி அருகில் ரூ.769 இலட்சம் மதிப்பீட்டில் சுங்கன்பாண்டு அமைக்கும் பணி, கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.57,53 இலட்சம் மதிப்பீட்டில் வெள்ளானைப்பட்டி முதல் மோளப்பாளையம் வரை ரோடு புதுப்பிக்கும் பணி, அண்டக்காபாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.3 இலட்சம் மதிப்பீட்டில் தென்னை மரங்களை சுற்றி வட்ட பாத்தி அமைக்கும் பணி, 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் ரூ.1.82 இலட்சம் மதிப்பீட்டில் சிறிய சமுதாய் சுகாதார வளாகம் கட்டும் பணி கைக்கோலபாளையத்தில் ரூ.11.70 இலட்சம் மதிப்பீட்டில் 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி கட்டும் பணி உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது எஸ்.எஸ்.குளம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் கவிதா, உதவி இயக்குநர் பேரூராட்சி துவாரகநாத் சிங், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
Leave a Reply