தொடர் மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 28 அடியாக உயர்வு.
கோவை மாநகரத்துற்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை விளங்குகிறது. இந்த அணை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காட்டில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 45 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அணையின் நீர்மட்டம் 22 அடியாக குறைந்தது.
கடந்த 1ஆம் தேதி நீர்மட்டம் 25 அடியாக இருந்தது சிறுவாணி அனையின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தற்பொழுது சிறுவாணி அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 28 அடியை எட்டியுள்ளது. இன்னிலையி அணைக்கு வரும் தண்ணீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
அணையில் இருந்து குடிநீருக்காக 7 கோடி லிட்டர் (70 எம்.எல்.டி) தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை குடிநீர் பிரச்சனை இருக்காது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்தால் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது.
Leave a Reply