தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் மீண்டும் தொடக்கம். இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2023 ஆம் ஆண்டிற்கு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்வதற்கு கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த இலக்கான 22000 மெ.டன் பூர்த்தி அடைந்த நிலையில் தற்போது விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில் அரசால் கொப்பரை கொள்முதல் இலக்கு அதிகரித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி (1500 மெ.டன்) ஆனைமனை (1200 மெ.டன்), செஞ்சேரி மலையடிப்பாளையம்) (1000 மெ.டன்), காரமடை (1000 மெ.டன்), சூலூர் (1000 மெ.டன்), கிணத்துக்கடவு (900 மெ.டன்) அன்னூர் (800 மெ.டன்), நெகமம் (800 மெ.டன்), தொண்டாமுத்தூர் (700 மெ.டன்) மற்றும் கோயம்புத்தூர் (500 மெ.டன்) ஆகிய 10 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக கூடுதலாக 9400 மெ.டன் அரவை கொப்பரை கிலோ ரூ.108.60. க்கும் மற்றும் 400 மெ.டன் பந்து கொப்பரை கிலோ ரூ.117.50-க்கும் 25.11.2023 வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.
மத்திய அரசு கடிதத்தின்படி ஏற்கனவே ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்துள்ள விவசாயிகளிடம் இருந்து மட்டும் கொப்பரை கொள்முதல் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்துள்ள கோயம்புத்தூர் மாவட்ட தென்னை விவசாயிகள் இக்கால நீட்டிப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply