பண்டிகை வாழ்த்து செய்தியுடன் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விநியோகம் செய்யப்படும். 

பண்டிகை நாட்களை முன்னிட்டு பண்டிகை வாழ்த்து செய்தியுடன் இரண்டு நாட்களுக்கு பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படும் என கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.  

இது குறித்தான செய்தி அறிக்கையில் கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் தற்பொழுது விற்பனை செய்யப்பட்டு வரும் ஆவின் டிலைட் பாக்கெட் பால் சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பண்டிகை வாழ்த்து செய்தியுடன் இரண்டு நாட்களுக்கு மட்டும் பச்சை நிற பாக்கெட்டில் வினியோகம் செய்யப்படும் எனவும் பொதுமக்கள் அனைவரும் பண்டிகை வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் தொடர்ந்து ஆவின் பால் பயன்படுத்தி ஆதரவு தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading