பண்டிகைகளை முன்னிட்டு கோவையிலிருந்து 220 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிட், சார்பில் கோவையிலிருந்து மதுரை, திருச்சி ஆகிய ஊர்களுக்கு 220 பேருந்துகள் இயக்கப்படும் என மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ் தெரிவித்துள்ளார். இது குறித்தான அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை லிட். சார்பில் வருகின்ற 20.10.2023 முதல் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக வார இறுதி நாட்கள், ஆயுத பூஜை. சரஸ்வதி பூஜை மற்றும் விஜய தசமி ஆகிய விடுமுறை நாட்கள் தொடர்ந்து வருவதால் கோவையிலிருந்து சேலம், உதகை மதுரை, திருச்சி, தேனி, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு 220 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

கோவை – காந்திபுரத்திலிருந்து சேலத்திற்கு- 70 பேருந்துகள், உதகைக்கு 20 பேருந்துகள், சிங்காநல்லூரிலிருந்து மதுரைக்கு – 50 பேருந்துகள், திருச்சிக்கு – 50 பேருந்துகள், தேனிக்கு -20 பேருந்துகள், திண்டுக்கல்லுக்கு -10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும் தேவைப்படும் போது கூடுதலாக பொது மக்களின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும். மேலும் விடுமுறை முடிந்த பிறகு பொதுமக்கள் மீண்டும் அவரவர் ஊர்களிலிருந்து திரும்பி வர ஏதுவான வகையில் மேற்படி ஊர்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading