ஆனைமலை திவான்சாபுதூரில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் ஒத்திவைப்பு.

கோவை மாவட்டம் ஆனைமலை திவான்சாபுதூரில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பிம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆனைமலை வட்டம், திவான்சாபுதூர் கிராமம், VPP திருமண மண்டபத்தில் (சக்தி சோயாஸ் நிறுவனம் அருகில்), 18.10.2023 அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறவிருந்த மக்கள் தொடர்பு முகாம் வருகின்ற 31.10.2023 (செவ்வாய்கிழமை) காலை 11.00 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எழுதி பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் கொடுக்கலாம். மனுக்கனை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து 31.10.2023 அன்று திவான்சாபுதூர் கிராமம், VPP திருமண மண்டபத்தில் (சக்தி சோயாஸ் நிறுவனம் அருகில்), நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி  வழங்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது./im

Loading