அதிமுக தொடர் வெற்றியால் கோவை புறக்கணிக்கப்பட்டு வருகிறது – அதிமுக சட்டமன்ற உறுப்பினர்  பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு.

கோவை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பங்கேற்காமல் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ், சிங்காநல்லூர் ஜெயராமன், கவுண்டம்பாளையம் பி.ஆர்.ஜி.அருண்குமார், கோவை வடக்கு அம்மன் அர்ச்சுணன், சூலூர் கந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

கூட்டத்திற்கு வருகை புரிந்த அதிமுக சட்டமன்ற உறுபினர்கள் இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்காதது கண்டனம் தெரிவித்திருந்தனர். கூட்டமானது சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பதில் அளித்த சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் பங்கு பெறாதது மிகுந்த மன வேதனை அளிக்கிறது எனவும்அடிப்படை வசதிகள் குறித்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை எனவும் பதில் கூற அதிகாரிகளும் வரவில்லை என்றார். மேலும் கண்துடைப்பிற்காக நடத்தப்பட்ட கூட்டமாக தான் இருந்தது எனவும் விமர்சித்தார். கோவை மாவட்டம் தொடர்ந்து புறகணிக்கப்பட்டு வருவதற்கு சான்று மாவட்ட ஆட்சியரே கூட்டத்திற்கு வராதது ஒன்று எனவும் சாடினார். 

மேலும் அதிமுக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருவதும், மீண்டும் அதிமுக வெற்றி பெரும் என்பதால் எந்த வளர்ச்சி பணியையும் திமுக செய்யவில்லை என்றார்.  அதிமுக ஆட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட 500, ஆயிரம் கோடி பணத்தை வீண் அடித்துள்ளனர் என தெரிவித்த அவர் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் புறநகர் சாலைகள் கைவிடப்பட்டதே உதரணமாக உள்ளது எனவும் அத்திகடவு குடிநீர் திட்டம் இன்னும் நிறைவேற்றபடவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். ஆளுனர் குறித்த கேள்வி எழுப்பியது நன்றி வணக்கம் என பதில் அளித்து சென்றார்.

Loading