தேசிய அளவிலான யோகா போட்டிகள் கடந்த நேற்று கோவாவில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கோவா கர்நாடகா என நாடு முழுவதும் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக திருப்பூரில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்கள் கோவாவில் நடைபெற்ற போட்டிக்கு தேர்ந்தெடுக்கபட்ட நிலையில் தேசிய அளவிலான போட்டியிலும் தமிழ்நாட்டின் சார்பில் கலந்துகொண்ட 35 வீரர் வீராங்கனைகள் வெற்றி பெற்று கோப்பைகள் மற்றும் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.
முன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டிகளில் அதிகளவில் தமிழக வீரர்கள் வெற்றி பெற்று அசத்திய நிலையில் இன்று கோவாவில் இருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தவர்களை பெற்றோர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். இது குறித்து பேசிய வீராங்கனை கனிஷ்கா, கடந்த 4 வருடங்களாக யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தான் போட்டியிட்ட இரு பிரிவுகளிலும் முதல் பரிசை பெற்றதாகவும் தெரிவித்தார்.
மேலும் இது குறித்து பேசிய யோகா பயிற்சியாளர் ஜாவித் தேசிய அளவிலான போட்டியில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொண்ட இந்த மாணவ மாணவிகள் சிறப்பாக ஆசனங்களை செய்து காட்டி வெற்றி பெற்றதாகவும், குறிப்பாக ராகுல் என்ற மாற்று திறனாளி மாணவர் முதல் பெற்றிருப்பது தமிழ்நாட்டிற்கு கிடைத்த பெருமையாக கருதுவதாகவும் தெரிவித்தார். மேலும் இது போன்ற மாணவர்களுக்கு அரசு உதவ வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.
Leave a Reply