மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தால்  பல்வேறு மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியன் சொசைட்டி ஆப் கிரிட்டிக்கல் கேர் மெடிசின் சார்பாக, கோவையில் தொற்று நோய் குறித்த விழப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தற்போது மருத்துவ உலகில் பெரும் சவாலாக உள்ள தொற்று நோயை வரு முன் காப்போம், தொற்று நோய்க்கு எதிராக போராடுவோம் எனும் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். 

முன்னதாக நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக, ராமராஜ் காட்டன் நிறுவனத்தின் தலைவர் நாகராஜ், பி.எஸ்.ஜி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன் ஆகியோர்  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இதில் அவசர சிகிச்சை பிரிவின் சிறப்பு நிபுணர்கள்  டாக்டர் சிவக்குமார், சத்தியமூர்த்தி ஆகியோர் பேசுகையில், தற்போது மிகப்பெரும் சவாலாக உள்ள தொற்று நோய்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம்  ஏற்படுத்தும் விதமாக இந்த கருத்தரங்கை நடத்தி வருவதாகவும்,  தற்போது காய்ச்சல் பாதிப்புகள் சிறிய அளவில் இருந்தாலும் மருத்துவர்களை கண்டு பரசோதிப்பது அவசியம் என குறிப்பிட்டனர்.

தொடர்ந்து தற்போதை நவீன தொழில் நுட்பமான செயற்கை நுண்ணறிவு நவீன தொழில் நுட்பம் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தி வரும் நிலையில்,மருத்துவ உலகில் இந்த தொழில் நுட்பம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக தெரிவித்தனர். மருத்துவர்களும் நவீன செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப திறன்களை வளர்த்தி கொள்ளும் வகையில் இது போன்ற மருத்துவ கருத்தரங்குகள் மருத்துவர்களுக்கும் பயனளிக்கும் என நம்பிக்கை தெரிவித்தனர். குறிப்பாக தற்போது மழை மற்றும் தட்ப வெட்ப சூழ்நிலைகளால் தொற்று நோய்கள் அதிகம் பரவுவதாக தெரிவித்தவர் இது குறித்து பொதுமக்கள் அதிகம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கேட்டு கொண்டனர்

Loading