LIMP 2 RUN என்ற தலைப்பில் கை, கால்கள்,காயமுற்று முடங்கி கிடக்கும் விளையாட்டு வீரர்கள், ஏழைகளுக்கு இலவச மூட்டு அறுவை சிகிச்சை செய்து மீட்டெடுக்க முனைப்பு காட்டும் ரோட்டரி கிளப் ஆப் கோவை டவுன் டவுன். கோவை ரோட்டரி கிளப் ஆஃப் கோவை டவுன்டவுன் (Rotary Club of Coimbatore Downtown) சார்பில் ஆர்சிடி லிம்ப் 2 ரன் திட்டம் துவக்கி முதற்கட்டமாக ரூபாய் 40 லட்சம் செலவில் 30 பயனாளிகளுக்கு உதவிகள் செய்தனர்.கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், ரோட்டரி கிளப் கவர்னர் விஜயக்குமார் துவக்கி வைத்தனர்.
ரோட்டரி கிளப் ஆஃப் கோவை டவுன் டவுன் பல ஆண்டுகளாக பின் தங்கிய மக்களுக்காக செயல்பட்டு வரும் ஒரு அமைப்பாக உள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய லிம்ப் 2 ரன் திட்டத்தின் தலைவர் விளையாட்டு வீரர்கள்,ஏழைகள் பாதிக்கப்பட்ட மூட்டு,தசையின் காயங்களை குணப்படுத்த நுண்துளை அறுவை சிகிச்சைகளை இலவசமாக செய்கிறோம்.இதில் சர்வதேச நிதியில் இரண்டாவது திட்டமாக ரூபாய் 40 லட்சம் மதிப்பில் கோவை வி.ஜி.எம் மருத்துவமனையின் டாக்டர் சுமன் குழுவினருடன் நடக்கிறது. முட்டு வலியால் பாதிக்கப்பட்ட விளையாட்டு வீரர்கள்,நிதி வசதியற்ற ஏழைகளுக்கு இலவச சிகிச்சைகள் வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் முதல் பயனாளியாக சூலூரை சேர்ந்த கபடி விளையாட்டு வீரரும்,வெல்டிங் தொழில் செய்து வருபவருமான ராஜதுரைக்கு முற்றுலும் இலவச அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது நடக்க தொடங்கியுள்ளார். இந்த சிகிச்சையை பெற விரும்புவோர் முதலில் முழங்கால் மூட்டில் ஏற்பட்டுள்ள சவ்வு கிழிப்பை ஸ்கேன் செய்து பரிசோதனை மேற்கொள்ள பாதிக்கப்பட்டவர்கள் ஏழ்மையில் உள்ளவராக இருந்தால் இலவச சிகிச்சை வழங்கப்படும். இந்த திட்டத்தில் அறுவை சிகிச்சைக்கு முன் உள்ள செலவுகள், அறுவை சிகிச்சைக்கான செலவுகள், சிகிச்சைக்கு பின் அடுத்த 3 மாதங்களுக்கான மருந்துகள் செலவு போன்ற அனைத்து செலவுகளும் ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிவித்தார்
Leave a Reply