கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பசியில்லா கோவை அறக்கட்டளையினர் ஆதரவற்றோர், சாலைகளில் வசிப்போர்,அரசு மருத்துவமனைக்கு வருவோர் என பல்வேறு ஏழை மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகின்றனர். கோவையில் பல்வேறு கிளைகளை கொண்டு செயல்பட்டு வரும் ஆஞ்சநேயா பழமுதிர் நிலையத்தின் நிர்வாக இயக்குனர்கள் கந்தசாமி,மற்றும் கணேஷ் ஆகியோரின் நிதி உதவியுடன் பசியில்லா கோவை அறக்கட்டளையினர் இந்த பணியை கடந்த நான்கு வருடங்களாக செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர்.
இந்நிலையில் தற்போது மேலும் தங்களது சேவைப்பணியை விரிவுபடுத்தும் விதமாக புதிய சமுதாய சமையற்கூடத்தை துவக்கி உள்ளனர். ஆதரவற்ற ஏழை எளிய மக்களின் பசியை போக்கும் விதமாக கரும்புகடை சேரன் நகர் பகுதியில் சமுதாய சமையற்கூடத்திற்கான துவக்க விழா பசியில்லா கோவை அறக்கட்டளையின் நிர்வாகிகள் செய்யது இப்ராகீம், நிஜாமுதீன், அசன் முகம்மது ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. இதில் அறக்கட்டளையின் கவுரவ ஆலோசகர் ஆஞ்சநேயா பழமுதிர் நிலையத்தின் நிர்வாக இயக்குனர் கந்தசாமி, அவரது சகோதரர் கணேஷ், மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரஃபி, டிஸ்கோ காஜா, ஜீவ சாந்தி அறக்கட்டளையின் நிர்வாகிகள் சலீம், அஷ்ரப் ஆகியோர் கலந்து கொண்டு சமுதாய சமையல் கூடத்தை சமையற்கூடத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் பசியில்லா கோவை அறக்கட்டளையின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply