வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நீர்நிலைகளுக்கு குளிக்கவோ, செல்ஃபி எடுக்கவோ அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கோவை மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தொடர்ந்து மழை பெய்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள், மண் சுவர் வீடுகள், சிதலமடைந்த கட்டிடங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் வெள்ள பெருக்கு அபாயம் உள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு குளிக்கவோ செல்ஃபி எடுக்கவோ அருகில் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Loading