கோவை மாவட்ட கராத்தை அசோசியேஷன் சார்பில் கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் சிறுவர் சிறுமியர்களுக்கான அனைத்து பாணி கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் எட்டு வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர் சிறுமியர்களுக்கு ஆல் ஸ்டைல் எனப்படும் அனைத்து பாணி கராத்தே போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தற்காப்பு கலையான கராத்தே கலையை கற்றுக்கொண்ட சிறுவர், சிறுமியர்கள் போட்டியில் நேர்த்தியாக மோதியதுடன் ஆக்ரோஷமான தாக்குதல்களால் எதிரியை நிலைகுலைய செய்து புள்ளிகளை அள்ளி சென்றனர்.
இதனைத் தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமியர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள், கோப்பைகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த போட்டிகள் குறித்து பேசிய கோவை மாவட்ட கராத்தே அசோசியேசனின் தலைவர் ஷிகான் விஜயகுமார் கூறும் போது மாவட்ட அளவில் சிறுவர், சிறுமியர்களுக்காக நடத்தப்படும் இந்த போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை வெல்பவர்களுக்கு பதக்கங்களும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கும் விதமாக சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் 2024 பிப்ரவரி மாதம் திருச்சியில் தமிழ்நாடு கராத்தே அசோசியாசன் சார்பில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார். மேலும் தற்பொழுது குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக சமுகத்தில் நிகழும் பாலியல் சீண்டல்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள கராத்தே போன்ற தற்காப்பு கலைகள் மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் தெரிவித்தார். இதில் ஆசிய நடுவரும் கோவை மாவட்ட பொருளாளருமான ஷிகான் சிரில் வினோத் மற்றும் தேசிய நடுவரும், மாவட்ட செயலாளருமான ரென்சி கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Leave a Reply