ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் அப்டவுன் மற்றும் கோவை மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் கோவை மணியகாரன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் 8 வயது முதல் 50 வயதிலானவருக்கான மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றது. மைதானத்தில் விளையாடுவதை விடுத்து கைபேசிகளில் விளையாடி பொழுதை போக்குவதோடு உடல் நலத்தையும் கெடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்னிலையில் மக்களின் மத்தியில் இது போன்ற எந்தவித பாதிப்பும் இல்லாமல் மூளைக்கு வேலை கொடுக்கும் சதுரங்க போட்டியில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாகவும் மூளைக்கு நல்ல ஒரு யோசிக்கும் திறனை கொடுக்கும் விதமாகவும் அமைந்துள்ளதாக போட்டியில் கலந்து கொண்டவர்களும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் தெரிவித்தனர். இப்போட்டியில் சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் பாரபட்சமின்றி சதுரங்க போட்டியில் போட்டியிட்டனர். குறிப்பாக மாற்று திறனாளிகளுக்கு என தனிபிரிவில் போட்டி நடத்தபட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் பரிசாக வழங்கபட்டது.
Leave a Reply