வேலூர் மாவட்டம், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு சமூகங்களுடன் சேர்ந்து எய்ட்ஸ் தொற்றை குறைப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட சுகாதார துணை இயக்குநர் பானுமதி தலைமையில் நடந்தது. இதில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தபட்டது.
இதனை தொடர்ந்து எய்ட்ஸ் நோய்க்கு எதிரான கையெழுத்து இயக்கம் துவக்கபட்டது. இதில் அரசு அலுவலர்கள் பலர் கையெழுத்திட்டு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கினர். இதனைத்தொடர்ந்து அனைவரும் எய்ட்ஸ் நோய்க்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுகொண்டனர்.
இதில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் பாலசந்தர் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர் கடந்த ஆண்டு 5 சதவிகிதமாக இருந்த எய்ட்ஸ் பாதிப்புதொடர் விழிப்புணர்வின் காரணமாக இந்த ஆண்டு 0.5 எய்ட்ஸ் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply